கருணாநிதி அறக்கட்டளை சார்பில் ரூ.2 லட்சம் நிதியுதவி.. 8 பேருக்கு மு.க.ஸ்டாலின் வழங்கினார் !!
கருணாநிதி அறக்கட்டளை சார்பில் ரூ.2 லட்சம் நிதியுதவி.. 8 பேருக்கு மு.க.ஸ்டாலின் வழங்கினார் !!

கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு மருத்துவம், கல்விக்காக தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சம் நிதியை முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.
கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக கலைஞர் தந்த ரூ.5 கோடியில் கிடைக்கும் வட்டியில் மாதந்தோறும் ஏழை எளிய நலிந்தோர்க்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை கடந்த 2005 நவம்பர் மாதம் முதல் வழங்கப்பட்டு வருகிறது. வைப்பு நிதியாக போடப்பட்ட ரூ.5 கோடியில், 1 கோடியை தென்னிந்திய புத்தக விற்பனையாளர்- பதிப்பாளர் சங்கத்துக்கு 2007ஆம் ஆண்டு வழங்கினார்.

மீதமுள்ள ரூ.4 கோடியில் இருந்து கிடைக்கும் வட்டியில் தொடர்ந்து உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதுவரை 5 கோடியே 41 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், நவம்பர் மாதம் வட்டியில் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக மொத்தம் 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.
நிதி பெறுவோர் வெளி மாவட்டங்களில் இருந்து வந்து போகும் செலவை தவிர்ப்பதற்காக தபால் மூலம் வரைவு காசோலையாக அனுப்பப்படுகிறது, என திமுக தலைமை கழகம் தெரிவித்துள்ளது.
newstm.in

