ரூ.200 கோடி பணமோசடி விவகாரம்.. அமலாக்கத்துறை பிடியில் பிரபல நடிகை !!
ரூ.200 கோடி பணமோசடி விவகாரம்.. அமலாக்கத்துறை பிடியில் பிரபல நடிகை !!

பிரபல தொழிலதிபர் சிவிந்தர் மோகன் சிங்கின் மனைவி அதிதி சிங் என்பவரிடம் ரூ.200 கோடி பணம் பெற்று ஏமாற்றியதாக சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார். அவர் டெல்லி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில், அவருக்கு சொந்தமான சென்னை உள்ளிட்ட இடங்களில் அண்மையில் டெல்லி அலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர்.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், சுகேஷ் சந்திரசேகர் பண மோசடி விவகாரத்தில் அவரது காதல் மனைவியான நடிகை லீனா மரியா பால்க்கும் தொடர்பு இருப்பது அம்பலமானது. அவரையும் அண்மையில் அமலாக்கத்துறை கைது செய்தது. இந்த நிலையில் இருவரையும் மூன்று நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், நடிகை லீனா மரியா பால் மற்றும் அவரது கணவர் சுகேஷ் சந்திரசேகர் ஆகியோர் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சிறப்பு நீதிபதி அனில் ஆன்டில் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தம்பதியரை மூன்று நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது.

குற்றம்சாட்டப்பட்ட சுகேஷ் சந்திரசேகர், தனது 17 வயதிலிருந்தே பல்வேறு மோசடி வழக்கில் தொடர்புடையவராக இருந்துள்ளார். இவர் மீது பல எப்ஐஆர்கள் உள்ளன. தற்போது டெல்லி ரோஹினி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்றார். தொடர் விசாரணையில் மேலும் மோசடிகள் அம்பலமாகலாம் என கூறப்படுகிறது.
newstm.in

