Theme Check

ஜனவரி 1 முதல் ரூ.2,000 பணம் – மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி!!

ஜனவரி 1 முதல் ரூ.2,000 பணம் – மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி!!

ஜனவரி 1 முதல் ரூ.2,000 பணம் – மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி!!
X

பிரதம மந்திரியின் கிசான் திட்டத்தின் கீழ் வழங்கப்பட உள்ள ரூ.2,000 ஜனவரி 1ஆம் தேதி விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு மாற்றப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2019 பிப்ரவரியில் பிரதமர் மோடி சுமார் 1 கோடி விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக தலா ரூ.2,000 செலுத்தி இந்த திட்டத்தை துவக்கி வைத்தார்.

தகுதி வாய்ந்த விவசாயிகள் இந்த திட்டத்தில் சேரும் பட்சத்தில், ஒரு நிதி ஆண்டில் 3 முறை அவர்களின் வங்கி கணக்குகளில் தவணை நிதி தலா ரூ.2,000 வீதம் செலுத்தப்பட்டு வருகிறது.

இதன் மூலம் நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயி குடும்பங்களுக்கும் தலா ரூ.2,000 வீதம் மூன்று சம தவணைகளில் ஆண்டுக்கு ரூ.6,000 வருமான ஆதாரம் வழங்கப்பட்டு வருகிறது.

farmers

இதுவரை இந்த திட்டத்தின் கீழ் 9 தவணை நிதி வழங்கப்பட்டுள்ள நிலையில் 10ஆவது தவணைக்காக நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் காத்திருக்கிறார்கள்.

மத்திய அரசு சார்பாக தகுதியுள்ள விவசாயிகளின் மொபைல் நம்பர்களுக்கு ஒரு மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதில் அடுத்த தவணை 2022ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி பிரதமர் மோடி வெளியிடுவார் என்றும், விவசாயிகள் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு சமபங்கு மானியம் வழங்குவார் என்றும் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.

newstm.in

Next Story
Share it