Theme Check

நகை பிரியர்களுக்கு ஷாக் - சவரனுக்கு 240 ரூபாய் உயர்வு!

நகை பிரியர்களுக்கு ஷாக் - சவரனுக்கு 240 ரூபாய் உயர்வு!

நகை பிரியர்களுக்கு ஷாக் - சவரனுக்கு 240 ரூபாய் உயர்வு!
X

தங்கம் விலை உயர்வால் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். கொரோனா, மழை வெள்ளம் போன்ற பிரச்சினைகளுக்கு இடைவில் தங்கம் விலையும் உயர்ந்து வாடிக்கையாளர்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.இனிமே தங்கம் வாங்குவது ஒரு எட்டா கனியாக மாறிவிடுமோ என்ற நிலைமையில் ஏறிக்கொண்டே செல்கிறது அதன் விலை.

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.36,360-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து, ரூ.4,545-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 64,500 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 600 ரூபாய் உயர்ந்து ரூ.65,100-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.65.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Next Story
Share it