Theme Check

இவர்களுக்கு மட்டும் 10 லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.250 மானியம்.. முதல்வர் அதிரடி அறிவிப்பு..!

இவர்களுக்கு மட்டும் 10 லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.250 மானியம்.. முதல்வர் அதிரடி அறிவிப்பு..!

இவர்களுக்கு மட்டும் 10 லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.250 மானியம்.. முதல்வர் அதிரடி அறிவிப்பு..!
X

வறுமைக்கோட்டு கீழ் உள்ள குடும்பங்களுக்கு 10 லிட்டர் பெட்ரோலுக்கு 250 ரூபாய் மானியம் வழங்கப்படும் என ஜார்கண்ட் முதல்வர் தெரிவித்துள்ளார்.

குடியரசு தினத்தையொட்டி நேற்று (26ம் தேதி) ஜார்கண்ட் மாநிலம் தும்பா போலீஸ் லைனில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து முதல்வர் ஹேமந்த் சோரன் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
Hemant Soren rolls out petrol subsidy scheme on Republic Day - Telegraph  India
“வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள இருசக்கர வாகன உரிமையாளர்களுக்கு முதலமைச்சர் ஆதரவு திட்டத்தின் கீழ் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.25 வீதம் மாதந்தோறும் 10 லிட்டருக்கு 250 ரூபாய் மானியம் வழங்கப்படும்.

இந்த தொகை, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இந்த மானிய உதவியை பெறுவதற்கு, வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள ரேஷன் அட்டைதாரர்கள் குறிப்பிட்ட ‘மொபைல் ஆப்’பில் பதிவு செய்ய வேண்டும்.

தற்போது வரை 1.04 லட்சம் விண்ணப்பங்களில் 73 ஆயிரம் விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

Next Story
Share it