திருடர்களுக்கு ஜாமீன் வழங்க முதல்வர் நிதிக்கு ரூ.25,000.. ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு..!
திருடர்களுக்கு ஜாமீன் வழங்க முதல்வர் நிதிக்கு ரூ.25,000.. ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு..!

கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் 21-ம் தேதி, சிவகங்கை டாஸ்மாக் குடோனுக்கு சுமார் 975 மதுபான பெட்டிகள் லாரியில் கொண்டு வரப்பட்டது.
இந்த லாரி சமயபுரம் டோல்கேட் அருகே வந்தபோது, லாரியின் மீது மூடப்பட்டிருந்த தார்ப்பாய் கிழிக்கப்பட்டு, 36 மதுபான பெட்டிகள் திருடு போனது.
இதுகுறித்த புகாரின்பேரில் சமயபுரம் போலீசார் கோடீஸ்வரன், பழனிச்சாமி ஆகிய இருவரை கைது செய்தனர். இந்நிலையில், அந்த இருவரும் தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனக்கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.முரளி சங்கர், “இருவருக்கும் ஜாமீன் வழங்கப்படுகிறது. இதற்காக, இருவரும் தலா 25 ஆயிரம் ரூபாயை திரும்பப் பெறாத வகையில் தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதியில் டெபாசிட் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டார்.
Next Story

