Theme Check

வாடகை வாகன ஓட்டுநர்களுக்கு ரூ.3,000 : ஜூலை 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்..!

வாடகை வாகன ஓட்டுநர்களுக்கு ரூ.3,000 : ஜூலை 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்..!

வாடகை வாகன ஓட்டுநர்களுக்கு ரூ.3,000 : ஜூலை 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்..!
X

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை காரணமாக மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பல மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளது.

எனவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொரோனா நிவாரண உதவித் தொகைகள் வழங்கப்பட்டு கொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது கர்நாடக அரசும் மக்களுக்கான உதவித்தொகையை வழங்கி வருவதுடன், வாடகை வாகன ஓட்டுநர்களுக்கும் உதவித்தொகை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து கர்நாடக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘கொரோனா காரணமாக வணிக நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட ஆட்டோ, டாக்ஸி, மேக்சிகேப் போன்ற ஓட்டுநர்களுக்கு 3,000 ரூபாய் வீதம் உதவித்தொகை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உதவித்தொகையை பெறுவதற்கு http://sevasindhu.Karnataka.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.


மேலும், மே 27ம் தேதி முதல் ஏராளமானோர் இந்த இணையதளம் மூலம் விண்ணப்பங்களை அனுப்பி வருகின்றனர். இந்த இணையதளத்தில் ஜூலை 15ம் தேதி மாலை 6 மணிக்குள் விண்ணப்பங்களை பதிவிட வேண்டும். இந்த வாய்ப்பை, ஆட்டோ, டாக்ஸி மற்றும் மேக்சிகேப் வாகன ஓட்டுநர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்’ என அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:
Next Story
Share it