Theme Check

கூலித் தொழிலாளர்களுக்கு ரூ.3,000 பென்ஷன்!!

கூலித் தொழிலாளர்களுக்கு ரூ.3,000 பென்ஷன்!!

கூலித் தொழிலாளர்களுக்கு ரூ.3,000 பென்ஷன்!!
X

பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மாந்தன் யோஜனா என்ற திட்டம் சமீபத்தில்தான் மத்திய அரசு சார்பாக அறிமுகம் செய்யப்பட்டது.

இது அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான பிரத்யேக திட்டம். இந்தத் திட்டத்தின் கீழ் இணையும் தொழிலாளர்களுக்கு மாதாந்திர பென்சனாக குறைந்தபட்சம் 3,000 ரூபாய் வழங்கப்படுகிறது.

ஊழியர்கள் 60 வயதை அடைந்தவுடன் இந்த பென்சன் தொகை அவர்களுக்கு வழங்கப்படும். 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் இத்திட்டத்தில் இணையலாம். அவர்களின் மாத வருமானம் ரூ.18,000 அல்லது அதற்குக் குறைவாக இருக்க வேண்டும்.

Wage

வீடு சார்ந்த வேலைகள், சாலையோர விற்பனையாளர்கள், செங்கல் பணியாளர்கள், ரிக்ஷா வண்டிக்காரர்கள், கட்டுமானப் பணியாளர்கள், பீடி தொழிலாளர்கள், கைவினைக் கலைஞர்கள், தோல் பணியாளர்கள் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் இத்திட்டத்தில் இணைந்து பென்சன் வாங்கலாம்.

கூலித் தொழிலாளர்களின் எதிர்கால நலனுக்காக மத்திய அரசு அறிமுகம் செய்து வைத்துள்ளது. இதன் மூலம் கூலித் தொழிலாளர்கள் பயமின்றி எதிர்காலத்தை எதிர்கொள்ள முடியும்.

newstm.in

Next Story
Share it