Theme Check

குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் இழப்பீடு.. ராகுல் காந்தி கோரிக்கை..!

குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் இழப்பீடு.. ராகுல் காந்தி கோரிக்கை..!

குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் இழப்பீடு.. ராகுல் காந்தி கோரிக்கை..!
X

“இந்தியாவில் கொரோனா பாதிப்புக்குள்ளாகி 40 லட்சம் பேர் பலியாகி உள்ளனர்; ஆனால் மோடி அரசு, 5 லட்சம் பேர் மட்டுமே பலியாகினர் என கூறியுள்ளது” என்று, ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கூறியிருப்பதாவது: “பிரதமர் மோடி உண்மையை பேசவில்லை; மற்றவர்களையும் பேசவிடவில்லை.

கொரோனா பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு யாரும் உயிரிழக்கவில்லை என்று இன்னமும் பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

நான் முன்பே கூறியது போல், கொரோனா காலத்தில் அரசின் அலட்சியத்தால் உயிரிழந்தது 5 லட்சம் பேர் கிடையாது. 40 லட்சம் இந்தியர்கள் பலியாகியுள்ளனர்.

மத்திய அரசு அதன் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும். கொரோனா பாதிப்புக்குள்ளான ஒவ்வொரு குடும்பத்திற்கும் 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

Next Story
Share it