Theme Check

பலியானோர் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம்! முதல்வர் அதிரடி அறிவிப்பு!

பலியானோர் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம்! முதல்வர் அதிரடி அறிவிப்பு!

பலியானோர் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம்! முதல்வர் அதிரடி அறிவிப்பு!
X

உத்தரகண்ட் மாநிலம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 46 பேர் பலியாகி உள்ளனர். சாலைகள், பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

Heavy rainfall causes flooding in Uttarakhand, death toll rises to 25 | See  pics, videos - India News
இதுகுறித்து உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி இன்று (20ம் தேதி) செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது: “உத்தரகண்டில் ஒரு வாரமாக பெய்த கனமழையால் மாநிலம் முழுவதும் பெருமளவிலான சேதங்கள் ஏற்பட்டுள்ளது. மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப சிறிது காலம் தேவைப்படும்.

சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. நிலச்சரிவால், ஆற்று நீர் கிராமங்களை பாதித்துள்ளது; பாலங்கள் இடிந்து உள்ளன. முதலில் சாலைகளை சீரமைக்க வேண்டும். வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளதால், அந்தந்த பகுதியில் இருக்கும் அதிகாரிகளை மக்களுக்கு தடையின்றி உணவு, தண்ணீர் கொடுக்க அறிவுறுத்தி உள்ளோம்.

BJP's Pushkar Singh Dhami to take oath as Uttarakhand CM today - Hindustan  Times
நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும். தற்காலிக மீட்புப் பணிகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலா ரூ.10 கோடி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்தார்.
Tags:
Next Story
Share it