Theme Check

ரூ.45 லட்சம் ரொக்கம் தீயில் எரிந்து சேதம்... ஏடிஎம் மையத்தில் நடந்த பகீர் சம்பவம் !

ரூ.45 லட்சம் ரொக்கம் தீயில் எரிந்து சேதம்... ஏடிஎம் மையத்தில் நடந்த பகீர் சம்பவம் !

ரூ.45 லட்சம் ரொக்கம் தீயில் எரிந்து சேதம்... ஏடிஎம் மையத்தில் நடந்த பகீர் சம்பவம் !
X

ஆந்திரத்தின் அனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள பமிடி கிராமத்தில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. இந்நிலையில் இந்த ஏடிஎம் மையத்தில் நேற்று திடீரென தீப்பிடித்து எரிந்தது.

மதியம் 2.31 மணியளவில் ஏடிஎம்மில் தீ பற்றி எரிந்ததை கண்ட அப்பகுதியினர் அணைக்க முயன்றனர். எனினும் சிறிது நேரத்தில் தீ வேகமாக எரியத் தொடங்கியதால் அப்பகுதி மக்கள் தீயணைப்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் துரிதமாக அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் வந்த சில நிமிடங்களிலேயே தீ கட்டுப்படுத்தப்பட்டது.

எனினும் அதற்கு முன்பாகவே ஏடிஎம் இயந்திரம் முழுவதும் எரிந்து சாம்பலானது. ஏடிஎம்மில் எரிந்து நாசமான பணம் மற்றும் பொருள்களின் மதிப்பு ரூ. 44,59,284 என்று வங்கி அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் விபத்து ஏற்பட்ட நேரத்தில் அங்கு யாரும் இல்லாததால் யாருக்கும் பாதிப்பு இல்லை என்றும் தீயணைப்பு நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனிடையே தீவிபத்திற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏடிஎம் மையத்தில் கொள்ளை அடிக்கும் முயற்சியில் தீ வைக்கப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it