அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.50 லட்சம் மோசடி!!
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.50 லட்சம் மோசடி!!

ராமநாபுரத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 50 லட்ச ரூபாய் மோசடி செய்த வழக்கில் மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையை சேர்ந்த ஏழுமலை பெஞ்சமின் என்பவர் தாம் கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்தில் கல்வித்துறை ஆய்வாளராக பணிபுரிந்து வருவதாகவும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அரசு அலுவலங்களில் சுமார் 126 காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக கூறியுள்ளார்.
அந்த இடங்களில் வேலை வாங்கித் தருவதாக கூறி 22 நபரிடம் 50 லட்ச ரூபாய் வரை வாங்கினார். அவரிடம் பணம் கொடுத்தவர்கள் தொடர்ந்து வேலை கேட்டு வந்துள்ளனர். இதனையடுத்து ஏழுமலை பெஞ்சமின் போலியான பணி நியமன ஆணையை தயார் செய்து கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

போலி பணி நியமன ஆணையை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலத்திற்கு கொண்டு சென்ற போது தான் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அனைவரும் உணர்ந்தனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட விக்னேஷ் ராஜா என்பவர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் ஏழுமலை பெஞ்சமின் மீது பண மோசடி, போலி பணி நியமன ஆணையம் தயார் செய்தல், நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீஸார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் சென்னையை சேர்ந்த பத்மநாதன், ஜாவித் அலி ஆகிய 2 பேர்கள் ஏழுமலை பஞ்சமினுக்கு போலியான பணிநியமனம் தயார் செய்து கொடுத்தது இராமநாதபுரம், விருதுநகர், தென்காசி உள்ளிட்ட மாவட்ட ஆட்சியரின் சீல் போலியாக தயார் பண்ணி கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது
இதையடுத்து அவர்கள் இரண்டு பேரையும் ராமநாகபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ஒன்றரை லட்சம் ரூபாய் பணமும் பறிமுதல் செய்தனர்.
newstm.in

