அனைத்து ரேஷன்கார்டுகளுக்கும் ரூ.5,000.. விரைவில் வெளியாகவுள்ளது அறிவிப்பு..?
அனைத்து ரேஷன்கார்டுகளுக்கும் ரூ.5,000.. விரைவில் வெளியாகவுள்ளது அறிவிப்பு..?

தமிழகத்தில், 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. அதன்படி, தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு, பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், சமையலுக்குத் தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் உள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில், பொங்கல் விழாவை சிறப்பாகக் கொண்டாட, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் 2,500 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது. ஆனால் இந்த முறை ரொக்கப் பரிசு தொடர்பான அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது. இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று நம்பியிருந்த பொது மக்களிடையே இது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மக்களின் இந்த குறையை போக்க, ரூ.5,000 ரொக்கம் வழங்கலாம் என்று அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுரை வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் வர இருப்பதால், மிகப்பெரிய வெற்றியை அடைய இது அஸ்திரமாக இருக்கும் என்று திமுகவினர் நம்புகின்றனர்.
எனவே, அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் 5,000 ரூபாய் எவ்வாறு வழங்குவது என்று கோட்டை வட்டாரங்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

