Theme Check

60% மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு ரூ.5,000 உதவித்தொகை.. முதல்வர் அதிரடி அறிவிப்பு !

60% மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு ரூ.5,000 உதவித்தொகை.. முதல்வர் அதிரடி அறிவிப்பு !

60% மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு ரூ.5,000 உதவித்தொகை.. முதல்வர் அதிரடி அறிவிப்பு !
X

மாணவர்களுக்கான உதவித் தொகை திட்டம் குறித்த புதிய அறிவிப்பை மேற்குவங்க மாநில முதல்வர் வெளியிட்டுள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மாணவர்களுக்கான ‘சுவாமி விவேகானந்தா உதவித் தொகை திட்டம்' என்ற திட்டத்தை நேற்று அறிவித்தார். இந்த திட்டத்தின் படி மாநில வாரிய தேர்வுகளில் 60 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் மதிப்பெண் பெறும் மாணவர்கள் உதவித்தொகை பெற முடியும்.

college girls

முன்னதாக, இந்தத் திட்டத்தின் தகுதி அளவுகோல் 75 சதவீதமாக இருந்தது. இருப்பினும், தற்போது 60 சதவிகிதம் மதிப்பெண் பெறும் மாணவர்களும் தகுதியுடையவர்கள் என்று மம்தா தெரிவித்துள்ளார். முதல்வரின் புதிய அறிவிப்பால் இந்த ஆண்டு இந்த உதவித் தொகை பெறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் மாணவர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

college girls

இத்திட்டத்தின்படி, பொறியியல் படிப்பு மாணவர்களுக்கு ரூ. 5000 உதவித் தொகையும், பாலிடெக்னிக் மாணவர்களுக்கு ரூ. 1500 உதவித் தொகையும் வழங்கப்படுகிறது. இதே போல் கலை அறிவியல் கல்லூரிகள் இளநிலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு ரூ. 1000 உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது..

இந்த திட்டத்தின் கீழ், குடும்ப வருமானத்திற்கான உச்சவரம்பு ஆண்டுக்கு ரூ. 2,50,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

newstm.in


Tags:
Next Story
Share it