அரசு ஊழியர்களுக்கு ரூ.8 லட்சம்.. பிரபல வங்கி அறிவிப்பு..!
அரசு ஊழியர்களுக்கு ரூ.8 லட்சம்.. பிரபல வங்கி அறிவிப்பு..!

பிரபல பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் பேங்க் உடனடி கடன் வசதியில் ஒரு சூப்பர் அறிவிப்பை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது.
அதிலும், வீடு கட்ட திட்டமிட்டுள்ளவர்கள், நிலம் வாங்க நினைப்பவர்கள், கார் வாங்கும் ஐடியாவில் இருப்பவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். மத்திய - மாநில அரசு ஊழியர்களுக்கு ரூ.8 லட்சம் வரை உடனடி கடன் கிடைக்கும்.
PNB இன்ஸ்டா லோன் என்று பெயரிடப்பட்ட இந்த கடனை ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அதாவது வாடிக்கையாளர்கள் PNB One மூலமாக இந்த கடனுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?
1. https://instaloans.pnbindia.in/personal-loan/verify-customer#! இந்த இணையதள பக்கத்திற்கு செல்லவும்.
2. அதில் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும். பின்னர் ஆதார் விவரங்களை உள்ளிட வேண்டும்.
3. தொடர்ந்து, அதில் கேட்கப்படும் சில விவரங்களை பூர்த்தி செய்த பின்பு உங்கள் விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, கடன் வழங்கப்படும்.
இது முழுக்க முழுக்க உடனடி கடன் வசதி என்பதால் ஆன்லைனில் எல்லா கடனையும் பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு http://instaloans.pnbindia.in/ என்ற லிங்கினுள் சென்று பார்க்கலாம்.

