Theme Check

அண்ணாமலைக்கு ஒரு நாள் கெடு... ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டுள்ள திமுக!!

அண்ணாமலைக்கு ஒரு நாள் கெடு... ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டுள்ள திமுக!!

அண்ணாமலைக்கு ஒரு நாள் கெடு... ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டுள்ள திமுக!!
X

முதலமைச்சர் மு..ஸ்டாலினின் துபாய் பயணம் குறித்து அவதூறு பரப்பிய பா.. மாநில தலைவர் அண்ணாமலை 24 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கோர வேண்டும் என ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முதலமைச்சர் மு..ஸ்டாலின் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் துபாய்க்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் அவர் தன்னுடைய பணத்தை முதலீடு செய்ய துபாய் சென்றுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்தார்.

அவரது கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முதல்வரின் பயணத்தை கொச்சைப்படுத்தி பேசிய அண்ணாமலை மீது தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

rs bharathi

முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்களின் துபாய் பயணம் குறித்து அவதூறு பரப்பிய பா.. மாநில தலைவர் அண்ணாமலை 24 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கோர வேண்டும், இல்லையென்றால் 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தி.மு. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எச்சரித்துள்ளார்.

முதல்வரின் பயணம் குறித்து பலரும் பாராட்டி வரும் நிலையில், அண்ணாமலை முதலமைச்சரின் துபாய் பயணத்தை கடுமையாக விமர்சித்து வருகிறார். முதலமைச்சர் மு..ஸ்டாலின் மேற்கொண்டுள்ள இந்நிலையில், அண்ணா அறிவாலயத்தில் தி.மு. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் ஆகியோர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

RS-Bharathi

அப்போது பேசிய ஆர்.எஸ்பாரதி, தமிழக வளர்ச்சிக்காக முதலமைச்சர் மு..ஸ்டாலின் மேற்கொண்டுள்ள அரசு முறை துபாய் பயணத்தை கொச்சைப்படுத்தும் விதமாக அண்ணாமலை அவதூறு கருத்து பரப்பியுள்ளார்.

மேலும், பொய் மட்டுமே பேசி தனது அரசியல் பயணத்தை அண்ணாமலை மேற்கொண்டுள்ளதாகவும், இந்தியாவிலேயே சிறந்த முதலமைச்சராக செயலாற்றி வரும் மு..ஸ்டாலின் மீது காழ்ப்புணர்ச்சி காரணமாக அண்ணாமலை பொய் கருத்துக்களை பரப்பி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், அரசுப் பயணத்தை சொந்த முதலீடு செய்ய பயணம் மேற்கொண்டுள்ளதாக குற்றம்சாட்டும் அண்ணாமலை, பிரதமர் மோடி 64 முறை வெளிநாடுகளுக்கு மேற்கொண்ட பயணத்தையும் சொந்த முதலீடு செய்வதற்கான பயணம் என்றுதான் கூறுவாரா என கேள்வி எழுப்பினார்.

ANNAMALAI

முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்களை இழிவாகப் பேசியதற்கு கண்டனம் தெரிவித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளோம், அண்ணாமலை மன்னிப்பு கேட்காவிட்டால் தி.மு. சார்பில் எடுக்கப்படும் சட்ட போராட்டத்தை அவரால் தாங்க முடியாது எனவும் ஆர்.எஸ்.பாரதி எச்சரித்துள்ளார்.

newstm.in

Next Story
Share it