Theme Check

ரூ. 500 கோடி பட்ஜெட்டில் தயாராகும் பிரபாஸ் படத்தில் சீதையாக நடிக்கும் பிரபல நடிகை..!

ரூ. 500 கோடி பட்ஜெட்டில் தயாராகும் பிரபாஸ் படத்தில் சீதையாக நடிக்கும் பிரபல நடிகை..!

ரூ. 500 கோடி பட்ஜெட்டில் தயாராகும் பிரபாஸ் படத்தில் சீதையாக நடிக்கும் பிரபல நடிகை..!
X

ராமாயண புராணத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பகுதியை மட்டும் மையப்படுத்தி உருவாகும் அதிபுருஷ் படத்தில் ராமனாக பிரபாஸ் நடிக்கும் நிலையில், சீதையாக பிரபல பாலிவுட் நடிகை ஒருவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

பாகுபலி படத்தின் வெற்றிக்கு பிறகு பல்வேறு மொழிகளில் வரலாற்றுப் படங்கள் உருவாக்கப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. தமிழில் மணிரத்னம் இயக்கி வரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.அதேபோல, இந்தி மற்றும் தெலுங்கில் தயாராகி வரும் ஆதிபுருஷ் படமும் பெரிய எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. இதில் ராமனாக பிரபாஸ் மற்றும் ராவணனாக சைஃப் அலிகான் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன. ராமயாண புராணத்தில் சீதைக்கு மிகப்பெரிய பங்குண்டு.

அதனால் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகையை தேர்வு செய்வதற்காக பணிகள் வேகமாக நடந்து வந்தன. அதன்படி, தற்போது சீதையாக நடிக்க பிரபல நடிகையை படக்குழு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவர் தான் கீர்த்தி சனோன்.ஆரம்பத்தில் தெலுங்கு படத்தில் அறிமுகமான அவர் இந்தியில் தயாராகி வந்த லோ பட்ஜெட் படங்களில் நடித்து வந்தார். தற்போது முன்னணி நடிகையாக அவர் உயர்ந்துள்ளதை அடுத்து, ஆதிபுருஷ் பட வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.

மேலும் இந்த படத்தில் லட்சுமணனாக நடிக்க சன்னி சிங் இப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ரூ. 500 கோடி பட்ஜெட்டில் இந்த படத்தை இயக்குகிறார் ஓம் ராவத். தெலுங்கு மற்றும் இந்தியில் நேரடியாக தயாராகும் இந்த படம் தமிழ், கன்னடம் மற்றும் மலையாள மொழிகள் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது.


Tags:
Next Story
Share it