#BREAKING:- குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000.. அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்..!
#BREAKING:- குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000.. அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்..!

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்றும் அதற்கான விவரம் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் குடும்ப தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை திமுக தேர்தலின் போது அறிவித்து இருந்தது. திமுகவின் இந்த தேர்தல் வாக்குறுதி பெண்கள் இடையே பெரிய வரவேற்பை பெற்றது.
ஆனால், கொரோனா பரவல், பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த திட்டம் தொடங்கப்படவில்லை. மக்கள் இடையே எப்போது இந்த திட்டம் தொடங்கப்படும் என்று எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
இந்நிலையில், மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்திற்கான பொருளாதார, நிதி ஆதார வழிகளை தமிழக அரசு கடந்த ஆண்டு ஆய்வு செய்து வந்தது.
எங்கிருந்து நிதி திரட்டி மாதம் 1000 ரூபாய் கொடுப்பது, அதற்கு எவ்வளவு செலவு ஆகும் என்பது உள்ளிட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இதனிடையே, இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், “குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும். அதற்கான விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.
இதன்மூலம், வரும் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலுக்கு முன்பாக மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு தொடங்கி விடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

