#BIG NEWS:-மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 திட்டம்.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!
#BIG NEWS:-மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 திட்டம்.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!

உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அவகாசம் இன்றுடன் முடியவிருந்த நிலையில், ஜூலை 10-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மாணவிகள் www.penkalvi.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்கள் விவரங்களை பதிவேற்ற வேண்டும். கல்வி உதவித் தொகை திட்டம் குறித்த விவரங்களுக்கு 14417 என்ற கட்டணமில்லா எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை பெற இதுவரை சுமார் 2 லட்சம் மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.
Next Story

