Theme Check

தமிழ்நாட்டில் கல்லூரிகள் திறக்கப்பட்டதும் முதலாமாண்டு மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை..!!

தமிழ்நாட்டில் கல்லூரிகள் திறக்கப்பட்டதும் முதலாமாண்டு மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை..!!

தமிழ்நாட்டில் கல்லூரிகள் திறக்கப்பட்டதும் முதலாமாண்டு மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை..!!
X

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டத்தை, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் என்று மாற்றி அமைத்து தமிழ்நாடு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இத்திட்டத்தின்கீழ், 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து மேல்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 நிதியுதவி வழங்கப்படும் என்றும், மேல்படிப்பை இடைநிற்றல் இன்றி முடிக்கும்வரை மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்து. அது மட்டுமின்றி, மாணவிகள் மற்ற கல்வி உதவித்தொகை பெற்றுவந்தாலும், இந்த உதவித்தொகையும் வழங்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் கல்லூரிகள் திறக்கப்பட்டதும் முதலாமாண்டு மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

geetha

சென்னையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் கீதா ஜீவன் கூறும்போது, உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு உதவித்தொகை ரூ.1,000 வழங்குவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாக கூறினார்.

Next Story
Share it