Theme Check

CSK-வின் சாதனையாளர் பட்டியலில் இணைந்தார் ருதுராஜ் கெய்க்வாட் !!

CSK-வின் சாதனையாளர் பட்டியலில் இணைந்தார் ருதுராஜ் கெய்க்வாட் !!

CSK-வின் சாதனையாளர் பட்டியலில் இணைந்தார் ருதுராஜ் கெய்க்வாட் !!
X

இந்தாண்டு ஐபிஎல் திருவிழா இறுதிக்கட்டத்தில் உள்ளது. இதில், 4ஆவது ஐபிஎல் கோப்பையை வெல்லும் பாதையை நோக்கி சிஎஸ்கே முன்னேறியுள்ளது. நேற்று நடந்த டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக 50 பந்துகளில் 70 ரன்களை விளாசி ருதுராஜ் அதில் 5 பவுண்டரி ஒரு சிக்சரையும் அடித்து ஆட்டமிழந்தார். எனினும் சிஎஸ்கே வெற்றிபெற்று நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

நேற்றைய போட்டியில் 70 ரன்கள் எடுத்ததன் மூலம் ருதுராஜ் கெய்க்வாட், இந்த ஐபில் தொடரில் 600 ரன்களைக் கடந்தார். பஞ்சாப் கிங்ஸ் கிங் கே.எல். ராகுலுக்கு அடுத்த படியாக ருதுராஜ் 600 ரன்கள் மைல்கல்லை 2021 ஐபிஎல் தொடரில் எடுத்துள்ளார். 2013 ஐபிஎல் தொடரில் மைக் ஹஸ்ஸி 733 ரன்களை எடுத்தார். 2018 சீசனில் அம்பதி ராயுடு 602 ரன்கள் விளாசினார்.

ruthuraj

கே.எல்.ராகுல் இப்போது 626 ரன்களுடன் ஆரஞ்சு தொப்பியை பெற்றுள்ளார். ஆனால் ராகுலை வீழ்த்தி நிச்சயம் ருதுராஜ் ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றுவார் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏனெனில், கெய்க்வாட் 603 ரன்கள் பெற்றுள்ளார். இன்னும் அவர் ஐபிஎல் இறுதிப்போட்டியில் விளையாட வேண்டியுள்ளது.

மேலும், இந்த ஐபிஎல் தொடரில் ஷிகர் தவான் 551 ரன்கள் என்று இருக்கிறார். ஃபாப் டுபிளெசிஸ் 547 ரன்கள் எடுத்து 4ம் இடத்தில் இருக்கிறார். கிளென் மேக்ஸ்வெல் 498 ரன்கள் எடுத்துள்ளார். இதன்மூலம், ஐபிஎல் தொடர்களில் ஒரே சீசனில் 600 ரன்களுக்கும் மேல் விளாசிய 3ஆவது சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் என்ற சாதனையை தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் நிகழ்த்தியுள்ளார்.

newstm.in

Tags:
Next Story
Share it