Theme Check

ஆளுங்கட்சி மூத்த தலைவர் சுட்டு கொலை..!! பீகாரில் பதற்றம்..!!

ஆளுங்கட்சி மூத்த தலைவர் சுட்டு கொலை..!! பீகாரில் பதற்றம்..!!

ஆளுங்கட்சி மூத்த தலைவர் சுட்டு கொலை..!! பீகாரில் பதற்றம்..!!
X

பீகாரில் முதல்வர் நிதீஷ் குமார் பக்தியார்பூர் நகரில் ஷீல்பத்ரா யாஜி என்ற சுதந்திர போராட்ட வீரரருக்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கடந்த 2 நாட்களுக்கு முன் சென்றார். அவருடன் பாதுகாவலர்களும் இருந்தனர்.

அவர் மேடையேறி மலரஞ்சலி செலுத்தி கொண்டிருந்தபோது, இளைஞர் ஒருவர் மேடை ஏறி சென்று, முதல்வரின் தோளில் ஒரு குத்து விட்டுள்ளார். இதனை கண்டவுடன் அருகேயிருந்த பாதுகாவலர்கள் உடனடியாக இளைஞரை சூழ்ந்து கொண்டு தள்ளி சென்றனர். அந்நபர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில், அவர் நகை கடை ஊழியர் சங்கர் வர்மா என அடையாளம் காணப்பட்டு உள்ளது. .

இந்த நிலையில், சம்பவம் நடந்து 2 நாட்களில் ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சியை சேர்ந்தவரும் நாகர் பரிஷத் அமைப்பின் துணை தலைவரான தீபக் குமார் மேத்தா என்பவரை நேற்று மாலை அவரது வீடு அருகே வைத்து மர்ம நபர்கள் துப்பாக்கியால் 5 முறை சுட்டு விட்டு தப்பினர்.

இதில் காயமடைந்த அவரை, மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உள்ளனர். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்து உள்ளார். இதுகுறித்து எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. சொத்து விவகாரம் அல்லது அரசியல் பகையால் படுகொலை நடந்திருக்கலாம் என பாட்னா நகர போலீஸ் சூப்பிரெண்டு தில்லான் கூறியுள்ளார்.

Tags:
Next Story
Share it