எனது குடும்பத்தை கொல்ல ரஷ்யா திட்டம்... உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி வேதனை !!
எனது குடும்பத்தை கொல்ல ரஷ்யா திட்டம்... உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி வேதனை !!

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் மூன்றாவது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் நாட்டின் ராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளன. உக்ரைனும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் பதற்றமான சூழல் நிலவிவருகிறது. உக்ரைன் தலைநகர் கீவ்-வை ரஷ்ய படைகள் சுற்றி வளைத்துள்ளன.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது. எனினும் எந்த நாடும் உக்ரைனுக்கு உதவ முன்வரவில்லை. இந்நிலையில், நாட்டு மக்களிடம் காணொலி வாயிலாக உரையாற்றிய உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி, உக்ரைன் தலைநகர் கீவ் மீது இருமுனை தாக்குதல் நடத்தப்படுகிறது.

தொடர்ந்து பேசிய அவர், ரஷ்யாவின் முதல் இலக்காக, தான் இருப்பதாகவும், தனது குடும்பத்தை கொல்வதற்கும் ரஷ்யா திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். போரில் தாங்கள் தனித்து விடப்பட்டிருப்பதாக வேதனையுடன் குறிப்பிட்ட செலன்ஸ்கி, தங்களுடன் இணைந்து போர் புரிவதற்கு யாரும் தயாராக இல்லை என்றும் தெரிவித்தார்.
நேட்டோ அமைப்பில் சேருவதற்கு யார் உத்தரவாதம் அளிப்பார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், இவ்விவகாரத்தில் அனைவரும் பயப்படுவதாகவும் கூறினார்.

உக்ரைன் மீதான தாக்குதலை கண்டித்து அமெரிக்க, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன. ஜி7 கூட்டமைப்பும் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதிக்க திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில், மேற்கத்திய நாடுகள் மீது, பொருளாதார தடைகளை விதித்து ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார். இதனால், உலோகங்கள் உள்ளிட்ட முக்கிய மூலப்பொருட்களுக்கு, ரஷ்யாவையே நம்பியுள்ள மேற்கத்திய நாடுகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
newstm.in

