Theme Check

70 ஆயிரம் துப்பாக்கிகளை வழங்கியது ரஷ்யா!!

70 ஆயிரம் துப்பாக்கிகளை வழங்கியது ரஷ்யா!!

70 ஆயிரம் துப்பாக்கிகளை வழங்கியது ரஷ்யா!!
X

AK 203 வகையைச் சேர்ந்த துப்பாக்கிகளை வாங்க இந்தியா, ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், அதன் ஒருபகுதியாக 70 ஆயிரம் துப்பாகிகளை ரஷ்யா இந்தியாவுக்கு வழங்கியுள்ளது.

இந்திய இராணுவத்தில் ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் INSAS துப்பாக்கிகளுக்கு பதிலாக AK 203 துப்பாக்கிகள் இடம்பெற உள்ளன. இந்த துப்பாக்கிகள் 300 மீட்டர் தூரத்தில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டவை.

மேலும் குறைந்த எடை, அதிக வலிமை, பயன்படுத்துவதற்கு எளிமை என இருப்பதால் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து பெற்றுக் கொண்டுள்ளது. முன்னதாக 6 லட்சத்து 70 ஆயிரம் AK 203 துப்பாக்கிகள் வாங்கி இந்தியா ரஷ்யா உடன் ஒப்பந்தம் செய்தது.

ak 203

அதில் 70 ஆயிரம் துப்பாக்கிகள் வழங்கியுள்ள நிலையில், மீதமுள்ள 6 லட்சம் துப்பாக்கிகள் உத்தரப்பிரதேச மாநிலம் அமேதியில் தயாரிக்கப்பட உள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

newstm.in

Next Story
Share it