ஆயுதங்களை கீழே போட்டால் உக்ரைன் பேரழிவில் இருந்து தப்பலாம்.. ரஷ்யா எச்சரிக்கை !!
ஆயுதங்களை கீழே போட்டால் உக்ரைன் பேரழிவில் இருந்து தப்பலாம்.. ரஷ்யா எச்சரிக்கை !!

ஆயுதங்களுடன் சரணடைந்து மரியுபோலை ஒப்படைக்காவிட்டால் பேரழிவை சந்திக்க நேரிடும் என உக்ரைனுக்கு ரஷ்யா பகீரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி ரஷ்ய அதிபர் புதின் உக்ரைன் மீதான தாக்குதலை அறிவித்தார். அதன்பின்னர் உக்ரைன் மீதான தாக்குதலை நாளுக்கு நாள் ரஷ்யா தீவிரப்படுத்தி வருகிறது. குறிப்பிட்ட சிறிய நகரங்களை பிடித்துவிட்ட ரஷ்யா அடுத்ததாக தலைநகர் கீவ், இரண்டவாது பெரிய நகரங்களான கார்கிவ் உள்ளிட்ட நகரங்களை கைப்பற்ற சண்டையிட்டு வருகிறது.

அந்தவகையில், மரியுபோல் துறைமுக நகரை கைப்பற்றும் இறுதிக்கட்ட தாக்குதலில் ரஷ்யா ஈடுபட்டுள்ளது. இதற்காக அங்கு 4 லட்சம் மக்களுடன் சிறைப்பிடித்து வைத்துள்ள ரஷ்யா தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. 400 பேர் தங்கியிருந்த பள்ளியின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. ரஷ்ய தாக்குதலில் உக்ரைனின் பொதுமக்கள் உயிரிழப்பு 1000 ஐ கடந்துள்ளது.
இந்நிலையில், மரியுபோல் நகரில் ஆயுதங்களை விடுத்து உக்ரைன் படைகள் சரணடையாவிட்டால் பேரழிவை சந்திக்க நேரிடும் என ரஷ்யா எச்சரித்துள்ளது. இதனிடையே, துறைமுக நகரான மரியுபோலை விட்டுக்கொடுத்து சரணடையுமாறு ரஷ்யா விதித்த கெடுவை ஏற்பதற்கில்லை என்று உக்ரைன் துணை பிரதமர் இரின வெரெஸ்சுக் தெரிவித்துள்ளார். ஆயுதங்களை விடுத்து சரணடையும் பேச்சுக்கே இடமில்லை. இதை நாங்கள் ஏற்கெனவே ரஷ்ய தரப்புக்கு தெரிவித்துவிட்டோம் என்று கூறியுள்ளார்.

தென்கிழக்கு துறைமுக நகரான மரியுபோல் ரஷ்யாவின் பிரதான இலக்காக உள்ளது. மரியுபோலை கைப்பற்றினால் ரஷ்யப் படைகள் கிரிமீயாவுக்கு தரை மார்க்கமாக வந்து செல்ல முடியும். கிரிமீயாவை ரஷ்யா 2014ல் தன்னுடன் இணைத்தது.
newstm.in

