Theme Check

ரஷ்ய படைகள் குண்டு வீச்சு.. பிரபல நடனக் கலைஞர் உயிரிழப்பு..!

ரஷ்ய படைகள் குண்டு வீச்சு.. பிரபல நடனக் கலைஞர் உயிரிழப்பு..!

ரஷ்ய படைகள் குண்டு வீச்சு.. பிரபல நடனக் கலைஞர் உயிரிழப்பு..!
X

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்து வரும் போரானது தொடர்ந்து 24-வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில், குடிமக்களில் 600 பேர் வரை உயிரிழந்துள்ளனர்; ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்தனர் என ஐநா மனித உரிமைகளுக்கான தூதரகம் தெரிவித்துள்ளது.

இதில், கடந்த சில நாட்களுக்கு முன் உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள குடியிருப்பு கட்டடம் ஒன்றின் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் உக்ரைன் நாட்டு நடிகை ஓக்சானா ஸ்வெட்ஸ் (67) காயமடைந்தார்.

அதன் பின்னர், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். உக்ரைன் நாட்டில் கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் வழங்கப்படும் உயரிய விருது நடிகை ஓக்சானாவுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

அதேபோல், ரஷ்ய தாக்குதலில் உக்ரைனைச் சேர்ந்த பிரபல பாலே நடனக் கலைஞர் ஆர்டியோம் தத்சிஷின் (43) காயமடைந்தார். அவர், கடந்த 3 வாரங்களாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்தது. அந்நாட்டில், தேசிய அளவில் சிறந்த நடனக் கலைஞரான அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Next Story
Share it