ரஷ்ய அதிபர் புடினின் சொத்துகள் முடக்கம்!!
ரஷ்ய அதிபர் புடினின் சொத்துகள் முடக்கம்!!

ரஷ்ய அதிபர் புடின், அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவின் சொத்துக்களை முடக்க ஐரோப்பிய யூனியன் ஒப்புதல் அளித்துள்ளது.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ரஷ்யா, அந்த நாட்டின் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தி வருகின்றது. இதனால் உக்ரைனில் பதற்றமான சூழல் நிலவுவதால், அங்குள்ள வெளிநாட்டு மக்கள் வெளியேறி வருகின்றனர்.
வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால், இரு பக்கமும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. ரஷ்யாவின் இந்த செயலுக்கு உலகின் பல்வேறு நாடுகளும் கண்டனங்கள் தெரிவித்து பொருளாதாட தடை விதித்து வருகிறது.

இதற்கிடையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுமாறு உக்ரைன் ராணுவத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். அதே நேரத்தில் பேச்சுவார்த்தைக்கும் இருநாடுகளும் அழைப்பு விடுத்துள்ளன.
இந்நிலையில் ரஷ்ய அதிபர் புடின், வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவின் சொத்துகளை முடக்க ஐரோப்பிய யூனியன் ஒப்புதல் அளித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் ஐரோப்பிய நாடுகளில் உள்ள இருவரது சொத்துகளை முடக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
newstm.in

