Theme Check

ரஷ்யா - உக்ரை பேச்சுவார்த்தை.. கடத்தப்பட்ட மேயர் விடுவிப்பு..!

ரஷ்யா - உக்ரை பேச்சுவார்த்தை.. கடத்தப்பட்ட மேயர் விடுவிப்பு..!

ரஷ்யா - உக்ரை பேச்சுவார்த்தை.. கடத்தப்பட்ட மேயர் விடுவிப்பு..!
X

ரஷ்ய படைக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுத்ததால், உக்ரைனின் மெலிடோபோல் நகர மேயர் இவான் பெடரோவை கடந்த 11-ம் தேதி ரஷ்ய ராணுவத்தினர் கடத்தியதாக உக்ரைன் அதிபர் விலோடிமிர் செலென்ஸ்கி மற்றும் அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து பேசிய அதிபர் செலென்ஸ்கி, “மெலிடோபோல் நகரை ரஷ்யா கைப்பற்றும் முயற்சியைத் தடுத்த அந்நகர மேயர் இவான் பெடரோவை ரஷ்ய ராணுவத்தினர் 10 பேர் கடத்திச் சென்றுள்ளனர். ரஷ்யா ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளைப் போல நடந்துகொள்கிறது” என, தனது கண்டனத்தை பதிவு செய்தார்.

மெலிடோபோல் நகர மேயர் இவான் பெடரோ கடத்தப்பட்டதால் ஆத்திரமடைந்த உக்ரைன் படையினர், இள வயது ரஷ்ய ராணுவத்தினர் 10 பேரை கைது செய்தனர்.

இந்நிலையில், பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு பிணைக் கைதிகளான ரஷ்ய வீரர்களை ரஷ்ய படையிடம் ஒப்படைத்த பின்னர் மெலிடோபோல் மேயர் இவான் பெடரோவை ரஷ்யப் படை விடுவித்துள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

Next Story
Share it