Theme Check

கள் இறக்கும் போராட்டம்… பாஜக அண்ணாமலை பங்கேற்பு!?

கள் இறக்கும் போராட்டம்… பாஜக அண்ணாமலை பங்கேற்பு!?

கள் இறக்கும் போராட்டம்… பாஜக அண்ணாமலை பங்கேற்பு!?
X

தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் கள் இறக்கி சந்தைப்படுத்தும் அறப்போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு கள் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கொக்கிரகுளத்தில் செய்தியாளர்களை சந்தித்அவர், தமிழகத்தில் கள் இறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனால் எந்த அரசும் எங்களின் கோரிக்கைகளை கண்டுகொள்ளவில்லை என வேதனை தெரிவித்தார் .

kal

கள் ஒரு போதை பொருள் அல்ல கள் போதை பொருள் என்று நிரூபித்தால் அவர்களுக்கு நாங்கள் 10 கோடி ரூபாய் பரிசு அளிக்க தயார் என கூறிய நல்லசாமி மற்ற மாநிலங்களில் கள் விற்பனை செய்யப்படுகிறது. எனவே தமிழகத்திலும் கள்ளை உணவுப் பொருட்களாக பயன்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

kal

ஜனவரி 21ஆம் தேதி நாங்கள் கள் இறக்கி பொதுமக்களுக்கு விநியோகம் செய்து அற வழியில் போராட உள்ளதாகவும், அந்த போராட்டத்தில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மநீம தலைவர் கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவிக்க உள்ளார்கள் எனவும் அவர் கூறினார்.

newstm.in

Next Story
Share it