2040 வரை முன்பதிவு செய்யப்பட்டுள்ள சபரிமலை படிபூஜை!!
2040 வரை முன்பதிவு செய்யப்பட்டுள்ள சபரிமலை படிபூஜை!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் படிபூஜைக்கு பக்தர்கள் 2040ஆம் ஆண்டு வரை முன்பதிவு செய்துள்ளனர்.
சபரிமலை ஐயப்பனுக்கு உலகம் முழுவதும் பக்தர்கள் உள்ளனர். கார்த்திகை, மார்கழி மாதங்களில் விரதம் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஏராளமானோர் சபரிமலை சென்று ஐயப்பனை தரிசித்து வருகின்றனர்.
இந்த ஆண்டு கொரோனா பரவலுக்கு மத்தியில் லட்சக்கணக்கானோர் சபரிமலை கோவிலுக்கு சென்று வந்தனர். சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் படிபூஜை மிகவும் சிறப்பு வாய்ந்தது.
படிபூஜைக்கு ரூ.75 ஆயிரம் கட்டணம் பக்தர்கள் செலுத்த வேண்டும். தற்போது 2040ஆம்ஆண்டு வரை பக்தர்கள் படிபூஜைக்கு முன்பதிவு செய்துள்ளனர். இதில் இருந்தே படிபூஜையின் முக்கியத்துவத்தை அறிய முடியும்.

அதே போல் ரூ.40ஆயிரம் கட்டணத்தில் நடத்தப்படும் உதயாஸ்தமன பூஜைக்கு 2026ஆம் ஆண்டு வரை பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். திருவிழாவின் போது நடத்தப்படும் உத்சவபலி பூஜைக்கு கட்டணம் ரூ.30 ஆயிரம் செலுத்த வேண்டும்.
சபரிமலையில் பூக்கள் அலங்காரம் செய்ய விரும்பும் பக்தர்கள் ரூ.50 ஆயிரம் செலுத்தி புஷ்ப அலங்காரத்திற்கான அனுமதி பெற்றுக்கொள்ளலாம். களபாபிஷேகம் செய்ய விரும்பும் ஐயப்ப பக்தர்கள் ரூ.8 ஆயிரம் கட்டணமாக செலுத்த வேண்டும்.
newstm.in

