Theme Check

மீண்டும் சபரிமலை நடை திறப்பு!!

மீண்டும் சபரிமலை நடை திறப்பு!!

மீண்டும் சபரிமலை நடை திறப்பு!!
X

மகர விளக்கு பூஜைக்காக மீண்டும் சபரிமலை நடை திறக்கப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு பெற்று கடந்த 26ஆம் தேதி நடை அடைக்கப்பட்ட நிலையில், மகரவிளக்கு பூஜைக்காக மீண்டும் சபரிமலை நடை திறக்கப்பட்டது.

திறக்கப்பட்ட சபரிமலை நடை 2022ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி வரை திறக்கப்பட்டிருக்கும். டிசம்பர் 30ஆம் தேதியான வரும் இன்றும் ஜனவரி 20ஆம் தேதியும் பந்தளம் அரண்மனை குடும்பத்தினரின் ஆச்சார வழிபாடுகள் மற்றும் சடங்குகள் இருப்பதால் ஐயப்ப பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

Sabari

டிசம்பர் 31ஆம் தேதி முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். தினசரி 60 ஆயிரம் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஜனவரி 14ஆம் தேதி பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனம் நடக்கிறது. மகரவிளக்கு பூஜை காலம் துவங்கியதையொட்டி ஐயப்ப பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Sabari

இந்நிலையில் கேரளாவில் ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அங்கு இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அது சபரிமலை பக்தர்களுக்கு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it