காதல் பட இயக்குநர் பாலாஜி சக்திவேல் வீட்டில் சோகம்.. பிரபலங்கள் இரங்கல் !!
காதல் பட இயக்குநர் பாலாஜி சக்திவேல் வீட்டில் சோகம்.. பிரபலங்கள் இரங்கல் !!

பிரபல திரைப்பட இயக்குனர் பாலாஜி சக்திவேல் அவர்களின் தந்தையார் இன்று காலை காலமானார்.
இயக்குனர் பாலாஜி சக்திவேல் தந்தை சக்தி வடிவேல் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார். அன்னாரது இறுதி சடங்குகள் இன்று மாலை 4 மணி அளவில் போரூர் மின் மயானத்தில் நடை பெற உள்ளது என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
மிகவும் இயல்பான கதைகளை இயக்கி, வெற்றி இயக்குனராக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் பாலாஜி சக்திவேல். பிரமாண்ட இயக்குனர் ஷங்கரிடம் துணை இயக்குனராக இருந்து, பின்னர் நடிகர் விக்ரம் நடிப்பில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான 'சாமுராய்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாலாஜி சக்திவேல்.

குறிப்பாக இவர் இயக்கத்தில் பரத் நடிப்பில் வெளியான 'காதல்', தமன்னா நடித்த 'கல்லூரி', மனிஷா யாதவ் நடித்த 'வழக்கு எண் 18 / 9 ' ஆகிய படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. எண் 18 / 9 படத்திற்காக தேசிய விருது, உட்பட பல விருதுகளைப் பெற்றார்.
சமீபத்தில் இயக்குனர் என்பதைத் தாண்டி, 'அசுரன்' , 'வானம் கொட்டட்டும்' ஆகிய படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து அசத்தி இருந்தார்.
newstm.in

