ஜெர்சியை கழட்டி கிறிஸ் கெயிலை ஒத்தைக்கு ஒத்தை அழைத்த சஹால்!
ஜெர்சியை கழட்டி கிறிஸ் கெயிலை ஒத்தைக்கு ஒத்தை அழைத்த சஹால்!

பஞ்சாப் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயிலுக்கு இணையாக தன்னுடைய ஒல்லியான உடலை சட்டையை கழட்டி புகைப்படத்துக்கு போஸ் கொடுத்துள்ளார் ஆர்சிபி சுழற்பந்துவீச்சாளர் சஹால்.
ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் நேற்று மோதின. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்தப் போட்டியில் பெங்களூர் அணி மிகவும் சொதப்பலான பேட்டிங்கை வெளிப்படுத்தியதால் பரிதாபமாக தோற்றது.

இந்த போட்டி முடிந்தபின்னர் அங்கு நடந்த மற்றொரு போட்டி தான் இப்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது. அது தான் பஞ்சாப் அணியின் கிறிஸ் கெயில் மற்றும் பெங்களூரு அணி வீரர் சஹால் இடையேயான போட்டி.
இரு அணிகளுக்கும் இடையே போட்டி முடிந்தப் பின்பு இரு அணி வீரர்களும் ஒருவருடன் ஒருவர் பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது கிறிஸ் கெயில் தன்னுடைய ஜெர்சியை கழட்டி கட்டுமஸ்தான உடலை காட்டி புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தார். இதனை பார்த்த சஹாலும் தன்னுடைய ஜெர்சியை கழட்டி பதிலுக்கு போஸ் கொடுத்தார். இருவரும் பாடி பில்டர்களைப் போல போஸ் கொடுத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தை பஞ்சாப் அணி நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
If we have to summarize #PBKSvRCB ⤵️#SaddaPunjab #PunjabKings #IPL2021 #PBKSvRCB pic.twitter.com/bplr9spBo9
— Punjab Kings (@PunjabKingsIPL) April 30, 2021
newstm.in

