ராஷ்மிகா மந்தானவுக்கு நாத்தனராக சாய் பல்லவி ?
ராஷ்மிகா மந்தானவுக்கு நாத்தனராக சாய் பல்லவி ?

அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு படக்குழு சாய்பல்லவியிடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
நனகு பிரேமதோ மற்றும் ரங்கஸ்தலம் போன்ற படங்கள் மூலம் தெலுங்கில் கவனமீர்த்த இயக்குநர் பாஸ்கர். இவர் தற்போது அல்லு அர்ஜுன் நடித்து வரும் புஷ்பா படத்தை இயக்கி வருகிறார். மிகவும் அதிரடியாக த்ரில்லர் கதையமைப்பில் தயாராகி வரும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஜகபதி பாபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

மேலும் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக சாய் பல்லவியிடம் படக்குழு பேசி வருகிறது. இது அல்லு அர்ஜுனின் தங்கைக்கான வேடமாகும். மிகவும் பயங்கரமான பின்னணியின், வலுவான கதாபாத்திரமாக இது அமையவுள்ளது. படத்தில் இந்த கதாபாத்திரத்தில் பெயர் தான் புஷ்பா என்றும், அதை மையப்படுத்திய கதை என்பதால் தான் படத்திற்கு புஷ்பா என்று பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நல்ல கதாபாத்திரங்களில் நடிப்பது சாய் பல்லவிக்கு மிகவும் பிடிக்கும் என்பதால், நிச்சயம் இந்த படத்தில் அவர் நடிப்பார் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். ஒருவேளை அதற்கு அவர் சம்மதித்துவிட்டால், அவருடைய திரை வாழ்க்கையில் புஷ்பா தனியான அடையாளம் பெறும்.

தற்போது சாய்பல்லவி லவ் ஸ்டோரி, விரடா பர்வம், ஷியாம் சிங் ராய் போன்ற தெலுங்கு படங்களில் வரிசையாக நடித்து வருகிறார். மேலும் தமிழில் காளி வெங்கட் நடிக்கும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. தமிழகத்தைச் சேர்ந்த சாய் பல்லை தெலுங்கில் கொடிகட்டி பறப்பது அவருடைய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

