மாதம் ரூ.62 ஆயிரம் சம்பளம்.. தமிழக சுகாதாரத்துறையில் வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க..!
மாதம் ரூ.62 ஆயிரம் சம்பளம்.. தமிழக சுகாதாரத்துறையில் வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க..!

தமிழக சுகாதாரத் துறையில், கிராமப்புற சுகாதார செவிலியர் மற்றும் ஏஎன்எம் பணிக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு, மாற்றுத்திறனாளிகள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
அறிக்கை எண்: 2/MRB/2022
தேதி: 20.01.2022
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Village Health Nurse /Auxiliary Nurse Midwife
காலியிடங்கள்: 39
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் இரண்டாண்டு ஏ.என்.எம் படிப்பு முடித்திருக்க வேண்டும். 2012க்கு முன் எனில் பத்தாம் வகுப்பு
தேர்ச்சியுடன் 18 மாத ஏ.என்.எம் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01-07-2022 தேதியின்படி 18 முதல் 59-க்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: கல்வித் தகுதி மற்றும் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
வெயிட்டேஜ் மதிப்பெண் விவரம்: பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு 20 சதவிகிதம், பிளஸ் 2 முடித்தவர்களுக்கு 30 சதவிகிதம், ஏ.என்.எம் முடித்தவர்களுக்கு 50 சதவிகிதம் என வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக்கும் முறை: www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300 (ஆன்லைனில் செலுத்த வேண்டும்).
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 09.02.2022
மேலும் கூடுதல் விவரங்களை http://www.mrb.tn.gov.in/pdf/2022/VHN_DAP_200122.pdf என்ற இணைப்பில் சென்று தெரிந்துகொள்ளவும்.

