Theme Check

மாதம் ரூ.44,900 சம்பளம்.. அரசுப் பள்ளியில் 584 காலியிடம்.. உடனே அப்ளை பண்ணுங்க..!

மாதம் ரூ.44,900 சம்பளம்.. அரசுப் பள்ளியில் 584 காலியிடம்.. உடனே அப்ளை பண்ணுங்க..!

மாதம் ரூ.44,900 சம்பளம்.. அரசுப் பள்ளியில் 584 காலியிடம்.. உடனே அப்ளை பண்ணுங்க..!
X

நவோதயா வித்யாலயா சமிதி வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில், காலியாக உள்ள PGT, TGT, Principal, Music Teacher மற்றும் Librarian பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

காலிப்பணியிடங்கள்: PGT, TGT, Principal, Music Teacher மற்றும் Librarian பணிகளுக்கு மொத்தம் 584 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி: விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் B.E, Diploma, PG Degree என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 35 என்றும் அதிகபட்ச வயதானது 50 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்: தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.44,900/- முதல் ரூ.2,09,200/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்: Principal பணிக்கு 2000 ரூபாய். PGT பணிக்கு 1800 ரூபாய். TGT, Music/Art Teacher, PET, Librarian பணிக்கு 1500 ரூபாய். SC/ST/PH விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரர்கள் Computer Based Test மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: ஆர்வம் மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப் படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 29.07.2022-ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு https://cbseitms.nic.in/NVSRecuritment / https://drive.google.com/file/d/1NXxEBAs1rQGktd4RIbP8PEpxIS1hdLxb/view அதிகாரபூர்வ தளத்தை பார்வையிடவும்.

Next Story
Share it