தரமற்ற பொருள் விற்பனையா..?: தட்டி விடுங்க இந்த நம்பருக்கு புகாரை..!
தரமற்ற பொருள் விற்பனையா..?: தட்டி விடுங்க இந்த நம்பருக்கு புகாரை..!

காலாவதியான குளிர்பானங்கள் விற்பனை மற்றும் தரமற்ற உணவு பொருட்கள் குறித்து புகார் அளிக்க உணவுப் பாதுகாப்புத் துறை வாட்ஸ்அப் எண் அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் 5,777 கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை நடத்திய ஆய்வில், 634 கடைகளில் காலாவதியான குளிர்பானங்கள் கண்டறியப்பட்டது.
ஆய்வின் தொடர்ச்சியாக ரூபாய் 9.02 லட்சம் மதிப்புள்ள குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 484 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இக்கடைகளில் எடுக்கப்பட்ட குளிர்பானங்களின் மாதிரிகள் உணவு பரிசோதனைக் கூடத்திற்கு அனுப்பப்பட்டு தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் குளிர்பானங்களை வாங்கும்போது காலாவதி தேதியை சரிபார்த்து வாங்க வேண்டும் என்றும், தரமற்ற, காலாவதியான குளிர்பானங்கள் குறித்து 94440 42322 என்ற ‘வாட்ஸ்அப்’ எண்ணுக்கு புகார் அளிக்கலாம் என்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.

