விருந்துக்கு அழைத்து இளம்பெண்ணுடன் நெருக்கம்.. வீடியோ வெளியானதால் சிக்கும் சேலம் அரசியல் தலைவர்கள் !!
விருந்துக்கு அழைத்து இளம்பெண்ணுடன் நெருக்கம்.. வீடியோ வெளியானதால் சிக்கும் சேலம் அரசியல் தலைவர்கள் !!

அந்தரங்க வீடியோ எடுத்து அரசியல் பிரமுகர்கள் சிலரை பெண் ஒருவர் மிரட்டியதாகவும் சேலம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் புதிய புயலை கிளப்பியுள்ளது.
சேலம் மாவட்டம் சூரமங்கலத்தை சேர்ந்தவர் கலைச்செல்வி. சேலம் மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதாவது, கலைச்செல்வி சேலத்தை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களிடம் நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது.
அரசியல் தலைவர்களுடன் அறிமுகம் ஏற்படுத்திக்கொண்டு, பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக பேசி நெருக்கம் ஆனதாகவும், அதன்பின்னர் ஒவ்வொருவரையும் தனி தனியாக விருந்து என்று கூறி வீட்டிற்கு அழைத்து இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இவ்வாறு 6 பேரிடம் கலைச்செல்வி பேசியதாக கூறப்படுகிறது.

எனினும் இதில் 3 பேர் மட்டுமே பெண்ணின் பேச்சில் உருகி அவரின் வீட்டிற்கு சென்றுள்ளனர். வெவ்வேறு நாட்களில் இவர்களை வீட்டிற்கு அழைத்து அவர்களுடன் பாலியல் ரீதியாக கலைச்செல்வி நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் நெருக்கமாக இருப்பதை கலைச்செல்வி வீடியோ எடுத்துள்ளார். இந்த சம்பவம் அனைத்திலும் கலைச்செல்விக்கு செல்வம் என்பவர் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கலைச்செல்வி எடுத்த வீடியோவை வைத்து செல்வம் அந்த அரசியல் பிரமுகர்கள் 3 பேரையும் மிரட்டி இருக்கிறார். பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோவை வெளியிடாமல் இருக்க பணம் கேட்டு மிரட்டுள்ளார். இதில் சில அரசியல் பிரமுகர்கள் செல்வத்திற்கும், கலைசெல்விக்கும் பயந்து லட்சக்கணக்கில் பணம் கொடுத்துள்ளனர் என தெரிகிறது.

ஆனால் மிரட்டி வாங்கப்பட்ட பணத்தை பங்கு போடுவதில் செல்வம் மற்றும் ரூபக் என்ற நபர் இடையே பிரச்சனை வந்துள்ளதாக கூறப்படுகிறது. ரூபக் என்பவர் செல்வத்திற்கு உடந்தையாக இருந்தவர் என்று கூறப்படுகிறது. தனக்கு வர வேண்டிய பங்கு வரவில்லை என்ற கோபத்தில் கலைச்செல்வியை கடத்திச்சென்று வீடியோ எடுத்து வாக்குமூலம் வாங்கி இருக்கிறார் ரூபக்.
அந்த வீடியோவில், செல்வத்தோடு சேர்ந்துதான் அரசியல் வாதிகளை மிரட்டி பணம் வாங்கினோம் என்று கலைச்செல்வியிடம் வாக்குமூலம் வாங்கி உள்ளார் ரூபக். இந்த வீடியோவை ரூபக் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், செல்வம் சொல்லித்தான் அரசியல்வாதிகளை ஏமாற்றினேன். 6 அரசியல் பிரமுகர்களை மடக்க வேண்டியது. 3 பேர்தான் சிக்கினார்கள் என்று கலைச்செல்வி ஒப்புக்கொண்டு உள்ளார்

இந்த நிலையில் ரூபக் கஸ்டடியில் இருந்து தப்பித்து வந்த கலைச்செல்வி தற்போது தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியுள்ளார். நாகேந்திரன் என்ற அரசியல் பிரமுகரின் ஆட்கள் தன்னை கொலை செய்ய முயல்வதாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கலைச்செல்வி ஏமாற்றிய 3 அரசியல் பிரமுகர்களில் ஒருவர்தான் நாகேந்திரன். தன்னிடம் ஏமாற்றம் அடைந்த விரக்தியில் தன்னை நாகேந்திரன் கொலை செய்ய முயல்வதாக கலைச்செல்வி குறிப்பிட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் கலைச்செல்வி, செல்வத்திற்கு எதிராக சேலம் போலீசிடம் நாகேந்திரன் புகார் அளித்துள்ளார். வீடியோ எடுத்து பணமோசடி செய்வதாக நாகேந்திரன் புகார் அளித்துள்ளார்.
சேலம் போலீசார் தற்போது கலைச்செல்வி - செல்வம் இருவரையும் கைது செய்து விசாரிக்கும் திட்டத்தில் உள்ளனர். பல்வேறு அரசியல் பிரமுகர்களிடம் கலைச்செல்வி - செல்வம் இருவரும் பல லட்சங்களை ஏமாற்றி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த விவகாரம் தற்போது சேலத்தில் புயலை கிளப்பியுள்ளது.
newstm.in

