Theme Check

நிஜ ஹீரோவுக்கு சல்யூட் ! தீப்பற்றி எரியும் கட்டிடத்தில் இருந்து குழந்தையை காப்பாற்றிய போலீஸ் !!

நிஜ ஹீரோவுக்கு சல்யூட் ! தீப்பற்றி எரியும் கட்டிடத்தில் இருந்து குழந்தையை காப்பாற்றிய போலீஸ் !!

நிஜ ஹீரோவுக்கு சல்யூட் ! தீப்பற்றி எரியும் கட்டிடத்தில் இருந்து குழந்தையை காப்பாற்றிய போலீஸ் !!
X

ராஜஸ்தான் மாநிலம் கரவ்லி நகரில், சனிக்கிழமை மாலை திடீரென வன்முறை வெடித்தது. இதில், கடைகள் மற்றும் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் நடந்தது. இந்து நாட்காட்டியின் கீழ் புத்தாண்டின் முதல் நாளான ‘நவ் சம்வத்சர்’ கொண்டாடும் விதமாக கரவ்லி நகரில், முஸ்லீம்கள் அதிகம் உள்ள பகுதி வழியாக மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது. அப்போது மோட்டார் சைக்கிள் பேரணியின் மீது கல் வீசப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அங்கு கலவரம் வெடித்தது. இதனை அடுத்து அங்கு 144 தடை உத்தரவு மற்றும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனிடையே, வன்முறை வெறியாட்டத்தின்போது, ராஜஸ்தான் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர், பச்சிளம் குழந்தையை காப்பாற்றிய நிகழ்வு இந்தியா முழுவதும் வைரலாகியுள்ளது.

police

கலவரக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்ட எரியும் கட்டிடங்களைக் கடந்து குறுகிய சந்துகள் வழியாக அவர் ஓடினார். இந்தப் படத்தை ஷாம்லி எஸ்.பி சுகிர்தி மாதவ் மிஸ்ரா தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். விலைமதிப்பற்ற உயிரைக் காப்பாற்றியதற்காக ராஜஸ்தான் காவல்துறையின் கான்ஸ்டபிள் நேத்ரேஷ் சர்மாவை நினைத்து மிகவும் பெருமைப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கலவரத்தின்போது ஒரு வீட்டில் தீவைக்கப்பட்டது. தீயில் மாட்டிக்கொண்ட ஒரு குழந்தையை தன் கைகளில் தூக்கியபடி அங்கிருந்து ஓடிச்சென்று காப்பற்றியுள்ளார்.மளமளவென பற்றி எரியும் தீயில், தன்னுயிரையும் பொருட்படுத்தாமல் ஒரு பிஞ்சு உயிரை காப்பாற்ற அவர் பட்டபாடு, நிச்சயம் அந்த போலீசுக்கு ஒரு மிகப்பெரிய சல்யூட் என நாடு முழுவதும் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


newstm.in

Tags:
Next Story
Share it