மீண்டும் காதலில் விழுந்த சமந்தாவின் முன்னாள் கணவர்!!
மீண்டும் காதலில் விழுந்த சமந்தாவின் முன்னாள் கணவர்!!

முன்னாள் மனைவி சமந்தாவை பிரிந்து ஒரு வருடம் கழித்து தற்போது நாக சைதன்யாவுக்கு மீண்டும் காதல் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காதலித்து, திருமணம் செய்து கொண்ட சமந்தாவும், நாக சைதன்யாவும் 4 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விவாகரத்தை அறிவித்தனர். அதன்பிறகு இருவரும் திரைப்படங்களில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நாக சைதன்யாவுக்கு தற்போது மீண்டும் காதல் வந்துள்ளதாக கூறப்படுகிறது. நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவுடன் கடந்த சில வாரங்களாக டேட்டிங் செய்து வருவதாக தகவல் கசிந்துள்ளது.

நாக சைதன்யாவும் சோபிதாவும் சமீபத்தில் ஜூப்ளி ஹில்ஸில் உள்ள சைதன்யாவின் புதிய வீட்டில் ஒன்றாகக் காணப்பட்டனர். இருவரும் வீட்டில் சிறிது நேரம் இருந்துவிட்டு பின்னர் காரில் புறப்பட்டு சென்றனர்.
அண்மையில் 'மேஜர்' படப்பிடிப்பின் போது இருவரும் ஓட்டலில் பலமுறை சந்தித்ததாக கூறப்படுகிறது. அவர்கள் உறவில் இருக்கிறார்களா என்பது தெரியவில்லை என்றாலும், இந்த காதல் கதை வதந்தி பற்றிய செய்திகளை இருவரும் இதுவரை மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in

