சாம்சங் லேட்டஸ்ட் போன் அறிமுகம்.. இதன் சிறப்பம்சம் மற்றும் விலை இதுதான்..!
சாம்சங் லேட்டஸ்ட் போன் அறிமுகம்.. இதன் சிறப்பம்சம் மற்றும் விலை இதுதான்..!

இந்தியாவில். ‘சாம்சங் கேலக்ஸி ஏ.ஓ.3 ஸ்மார் ட்போன்’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போன், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வியட்னாமில் அறிமுகம் செய்யப்பட்டது.
இதில், டூயல் பிரைமரி கேமரா, வாட்டர் டிராப் ஸ்டைல் நாட்ச், ஆக்டா கோர் பிராசஸர், அதிகபட்சம் 4GB ரேம் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், லைவ் ஃபோக்கஸ், பியூட்டி மோட் மற்றும் ஸ்மார்ட் செல்ஃபி ஆங்கிள், டால்பி அட்மோஸ் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இது, வயர்டு மற்றும் ப்ளூடூத் ஹெட்செட்களில் சீராக இயங்கும் வசதி கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் பிளாக், புளூ மற்றும் ரெட் நிறங்களில் கிடைக்கிறது.
இதன் சிறப்பம்சங்கள்:
6.5 இன்ச் HD + 720 x 1600 பிக்சல், இன்ஃபினிட்டி V TFT டிஸ்ப்ளே
ஆக்டா கோர் யுனிசாக் T606 பிராசஸர்
3GB / 4GB ரேம்
32GB / 64GB மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
48MP பிரைமரி கேமரா
2MP டெப்த் கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
5MP செல்ஃபி கேமரா
4ஜி எல்.டி.இ., வைபை, ப்ளூடூத்
மைக்ரோ யு.எஸ்.பி.
5000mAh பேட்டரி
புதிய சாம்சங் கேலக்ஸி ஏ.ஓ.3 ஸ்மார்ட்போனின் 3GB ரேம், 32 GB மாடல் விலை ரூ. 10,499 என்றும், 4GB ரேம், 64GB மெமரி மாடல் விலை ரூ.11,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அடுத்த வாரம் சில்லறை விற்பனை மையங்கள் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் தொடங்குகிறது.

