சனம் ஷெட்டியின் புது காதலர்! கரம் கோர்த்து அழைத்து காதலரை அறிமுகம் செய்து வைத்த சனம் ஷெட்டி...!
சனம் ஷெட்டியின் புது காதலர்! கரம் கோர்த்து அழைத்து காதலரை அறிமுகம் செய்து வைத்த சனம் ஷெட்டி...!

காதலர் தினத்தை தனது அன்பிற்குரியவருடன் கொண்டாடிய புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் சனம் ஷெட்டி . அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சனம் ஷெட்டிக்கு மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உருவானது. நிகழ்ச்சி முழுவதும் நேர்மையாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் இருந்தார் என அவருக்கு ரசிகர்கள் புகழாரம் சூட்டினர்.
பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற 17 போட்டியாளர்களில் தனித்து விளையாடி மக்கள் மனங்களை வென்றவர் இவர் மட்டும் தான். அவர் எலிமினேட் செய்யப்பட்டு நிகழ்ச்சியை விட்டு வெளியேறுகையில் #NoSanamNoBiggBoss என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டிங்கில் இருந்தது.
முந்தைய சீசனில் பங்கேற்ற போட்டியாளர் தர்ஷன், சனம் ஷெட்டியின் முன்னாள் காதலராவார். அவர்கள் இருவருக்கும் திருமணம் நடக்கவிருந்த நிலையில், தர்ஷன் தன்னை ஏமாற்றுவதாக கூறி காவல்துறையில் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார் சனம் ஷெட்டி.
அதை தொடர்ந்தே அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். போட்டியாளர்கள் தங்களுடைய வாழ்க்கை அனுபவத்தை நிகழ்ச்சியில் எடுத்துரைக்கும் சுற்று நடந்தது. அப்போது, தர்ஷனின் பெயரை குறிப்பிடாமல் தான் ஏமாற்றப்பட்ட சம்பவத்தை கூறினார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் அனுதாபங்கள் எழுந்தது.
இந்நிலையில் கடந்த 14ம் தேதி காதலர் தினத்தை காதலருடன் அவர் கொண்டாடியுள்ளார். கேண்டில் லைட் டின்னரில் அவருடன் கைக்கோர்த்தவாறு இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். ஆனால், தன்னுடைய காதலர் யார் என்கிற விவரத்தை அவர் வெளியிடவில்லை.
எனினும், ரசிகர்கள் அவருடைய பதிவுக்கு கீழ் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மெழுகுவர்த்தி ஒளியில் சிவப்பு நிற ஆடையில் சனம் ஷெட்டி அழகு தேவதையாக காட்சி தருகிறார் என ரசிகர்கள் பலரும் கமென்ட் செய்து வருகின்றனர். மேலும், சிலர் விரைவில் சனம் ஷெட்டி தனது காதலரை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்வார் என நம்புவதாக தெரிவித்துள்ளனர்.

