இயற்கை முறையில் சானிட்டைஸர் !! வீட்டிலேயே எளிதாக செய்யலாம்!
இயற்கை முறையில் சானிட்டைஸர் !! வீட்டிலேயே எளிதாக செய்யலாம்!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா உட்பட நோய் கிருமிகளிடம் இருந்து நம்மை தற்காத்துக் கொள்வதற்கு வீட்டிலேயே எளிதாக நம் முன்னோர்கள் கடைப்பிடித்த பாரம்பரிய முறையில் சானிட்டைஸர் செய்யலாம்.
இனி, மருந்து கடைகளில் அதிக விலை கொடுத்து சானிட்டைஸர்களுக்காக அல்லல்படத் தேவையில்லை. நம் சிறு வயதில், அப்பாக்களும், தாத்தாக்களும் கல் கண்டுப் போன்ற ஒரு கல்லை வைத்துக் கொண்டு, ஒவ்வொரு முறையும் முகச்சவரம் செய்த பின்னர், முகத்தில் தடவிக் கொள்வதைப் பார்த்திருப்போம்.
அதன் பிறகு ஷேவிங் க்ரீம்களும், லோஷன்களும் வந்து விட்ட விஞ்ஞான, இயந்திரத்தனமான வாழ்க்கையோட்டத்தில் அதையெல்லாம் நாம் கவனிக்காமல் விட்டு விட்டோம். அதன் பெயர் படிகாரம். இதன் இயல்பு அனைத்து கிருமிகளும் பரவாமல் தடுக்கும்.
படிகாரம் கல் இப்போதும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். அதனை 20 கிராம் எடுத்து 2 லிட்டர் தண்ணீரில் கலந்துக் கொள்ளவும். பின்னர் இதனுடன் 100 கிராம் கல் உப்பு போட்டு நன்றாக கலக்கிக் கொள்ளவும். படிகாரம் நீர் தயார்.
பயன்படுத்தும் முறைகைகளையும், முகத்தையும் நன்றாக குளிக்கப் பயன்படுத்தும் சோப்பு வைத்து நன்றாக கழுவியப் பின்னர், இந்த படிகார நீரை வைத்து மீண்டும் ஒருமுறை நன்றாக கைகளையும், முகத்தையும் சானிட்டைஸர் பயன்படுத்துவதைப் போல பயன்படுத்தி சுத்தம் செய்துக் கொள்ளுங்கள். மிகச் சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது.
Newstm.in

