Theme Check

சசிகலா புஷ்பா படுக்கை அறையில் அரைகுறை ஆடையுடன்.. 2வது கணவர் போலீசில் புகார்..!

சசிகலா புஷ்பா படுக்கை அறையில் அரைகுறை ஆடையுடன்.. 2வது கணவர் போலீசில் புகார்..!

சசிகலா புஷ்பா படுக்கை அறையில் அரைகுறை ஆடையுடன்.. 2வது கணவர் போலீசில் புகார்..!
X

அதிமுக ராஜ்யசபா எம்பியாக இருந்தவர் சசிகலா புஷ்பா. திமுக ராஜ்யசபா எம்பி திருச்சி சிவாவை டில்லி விமான நிலையத்தில் கன்னத்தில் ஓங்கி அறைந்த பஞ்சாயத்தில் சிக்கியவர். அதன் பின்னர், மறைந்த முதல்வர் ஜெயலலிதா தன்னை தாக்கியதாக ராஜ்யசபாவில் புகார் எழுப்பி பரபரப்பை கிளப்பினார்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவில் அணிகள் மாறிக் கொண்டே இருந்தார் சசிகலா புஷ்பா. 2016-ம் ஆண்டு அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட முயற்சித்தார்.

இதற்காக அதிமுக தலைமை அலுவலகத்திற்கு மனு வாங்க சென்ற அவரது முதல் கணவர் லிங்கேஸ்வரன் கடுமையாக தாக்கப்பட்டார். இந்த விவகாரம் அப்போது தலைப்புச் செய்தியானது.
Court gives relief to Sasikala Pushpa - Tamil Nadu News, Chennai News,  Tamil Cinema News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai,  Petrol and Diesel Rate in Chennai
பின்னர் அமைதியாக இருந்த சசிகலா புஷ்பா 2018-ல் வழக்கறிஞர் ராமசாமியை 2-வது திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் டில்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது.

சசிகலா புஷ்பா திருமணம் செய்து கொண்ட வழக்கறிஞர் ராமசாமி மீது, தன்னை ஏற்கனவே திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக சத்யபிரியா என்ற பெண் புகார் கூறி நீதிமன்ற படிகளேறி அதுவும் பெரும் சர்ச்சையானது.

ஒரு கட்டத்தில் அதிமுகவில் இருந்து விலகிய சசிகலா புஷ்பா, பாஜகவில் இணைந்தார். பாஜகவின் தேசிய பொதுக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். தமிழக பாஜக தலைவர் பதவிக்கும் சசிகலா புஷ்பா பெயர் அடிபட்டது.
Expelled AIADMK MP Sasikala Pushpa joins BJP | Chennai News - Times of India
இந்நிலையில், சசிகலா புஷ்பா மீது அவரது 2-வது கணவர் வழக்கறிஞர் ராமசாமி ஆன்லைன் மூலமாக போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:

“மதுரை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஆஜராகி விட்டு கடந்த 13-ம் தேதி எனது மகளுடன் சென்னை வந்தேன். சென்னை, ஜீவன் பீமா நகரில் உள்ள எனது வீட்டிற்கு வந்து கதவை தட்டினேன். அமுதா என்பவர் கதவைத் திறந்தார்.

எங்கள் வீட்டிற்குள் உணவு பொட்டலங்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. ஆல்கஹால் வாடை வீசியது. படுக்கை அறையில் எனது மனைவி சசிகலா புஷ்பா படுத்திருந்தார். மற்றொரு அறையில் உள்ள படுக்கை அறையில், அடையாளம் தெரியாத நபர் அரைகுறை ஆடையுடன் இருந்தார்.
Sasikala Pushpa | RITZ
நான் அதிர்ச்சியாகி அந்த நபரை செல்போனில் வீடியோ எடுத்தேன். அந்த நபரும் அமுதா என்பவரும் என்னை ஆபாசமாக திட்டி மிரட்டல் விடுத்தனர்.

எனவே அந்த நபர்கள் மீதும், கணவன் என்ற முறையில் எனக்கு தெரியாமல் அந்த நபர்களை வீட்டிற்குள் அனுமதித்த என் மனைவி சசிகலா புஷ்பா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

Next Story
Share it