ஜனவரி 27, 2021ல் சசிகலா ரிலீஸ்... சூடு பிடிக்கும் தமிழக தேர்தல் அரசியல்!
ஜனவரி 27, 2021ல் சசிகலா ரிலீஸ்... சூடு பிடிக்கும் தமிழக தேர்தல் அரசியல்!

வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் கைதான சசிகலா, தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹார மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
பெங்களூர் சிறையில் கடந்த 4 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, எப்போது விடுதலையாவார் என்பது குறித்த பல்வேறு தகவல்கள் சமீபகாலமாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் ஜனவரி 27ம் தேதி சசிகலா விடுதலையாவார் என சிறைத் துறை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கோரப்பட்ட நிலையில் பெங்களூரு சிறைத்துறை இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

நீதிமன்றம் விதித்த அபாராதத் தொகையை, சசிகலா செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் ஒரு வருடம் தண்டனை நீட்டிக்கப்படும் என்றும், ஜனவரி 2022ம் ஆண்டு தான் விடுதலை செய்யப்படுவார் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிடிவி தினகரன் பெரிய அளவில் எடுபடாத நிலையில், சிறையிலிருந்து தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவே சசிகலா ரிலீசாவது தமிழக அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக வட்டாரத்தில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in

