சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து ! பிரதமர் மோடி இரங்கல் !!
சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து ! பிரதமர் மோடி இரங்கல் !!

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் மாரியம்மாள் பட்டாசு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் சுமார் 25 பேர் வேலை செய்து வந்துள்ளனர்.
அப்போது, யாரும் எதிர்பாரத வகையில், பட்டாசு தொற்சாலையில் திடீர் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலை முழுவதும் கருபும்புகை சூழ்ந்துள்ளது. இதனால், அங்கு வேலை செய்து வந்தவர்கள் பலரும் அடித்துபிடித்து வெளியேறினர். ஒரு சிலர் மட்டும் உள்ளே சிக்கிக் கொண்டனர்.
இந்த வெடி விபத்தில் கட்டடம் சேதமடைந்த நிலையில், முதலில் பலி எண்ணிக்கை 2 என்று தகவல் வெளியான நிலையில், தற்போது அது 12 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 10 பேர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் அனைவரும் சிவகாசி அசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்த விருதுநகர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தி வருகின்றனர். விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தின் விருதுநகர் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து வருத்தம் அளிக்கிறது. இந்தத் துயரமான நேரத்தில், உயிர் இழந்தவர்களின் குடும்பங்களைப் பற்றிக் கவலைப் படுகிறேன்.
— PMO India (@PMOIndia) February 12, 2021
இந்நிலையில், சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தீ விபத்தில் காயம் அடைந்தவர்கள் விரைவில் நலம் பெற வேண்டும் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமரின் பொதுநிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

