காப்பாத்துங்க.. !! போலீசில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடி..!!
காப்பாத்துங்க.. !! போலீசில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடி..!!

திருப்பூர் அவிநாசி ரோட்டில் உள்ள அனுப்பர்பாளையம் பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை வைத்து நடத்தி வருகிறார் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் நாதாராம்.இவரது மகள் சோபியா குமாரி, அனுப்பர்பாளையம் பகுயை சேர்ந்த முரளி. மொபைல் கடை ஊழியரான முரளியும் மகள் சோபியா குமாரி இருவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் நேற்று காலை வீட்டை விட்டு வெளியேறிய சோபியா குமாரியும் முரளியும் கோயில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டனர்.
இதனையடுத்து காதல் புதுமணத்தம்பதி திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் புகுந்தனர். இது குறித்து போலீசார் கொடுத்த தகவலின் பேரில் சோபியா குமாரியின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றுதிரண்டு காவல் நிலையம் வந்தனர்.
பின்னர் பெண்ணை தங்களோடு திருப்பி அனுப்பி வைக்கக்கோரி போலீசாரிடம் கோரிக்கை வைத்தனர். ஆனாலும் காதலனை கரம்பிடித்த சோபியா குமாரி பெற்றோருடன் செல்ல மறுத்ததுடன் தன்னை பெற்றோருடன் அனுப்பினால் கொலை செய்து விடுவார்கள் என போலீசாரிடம் தெரிவித்து தனக்கும் தனது கணவர் முரளிக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக்கூறி பிடிவாதமாக இருந்தார்.
இதனால் செய்வதறியாது திக்குமுக்காடிய பெண்ணின் உறவினர்கள் நேற்று நள்ளிரவு வரை காதல் ஜோடியை பிரித்து பெண்ணை தங்களோடு அனுப்பி வைக்கும்படி கேட்டு காவல் நிலையத்தை விட்டு செல்ல மறுத்து கூட்டமாக கூடியிருந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
இதனால் பொறுமையிழந்த காவல்த்துறையினர் ஒரு கட்டத்தில் கூட்டத்தை கலைக்க அதிரடிப்படை போலீசாரை வரவழைத்து பின்னர் அங்கு கூடியிருந்த பெண்ணின் உறவினர்களை கலைந்து செல்ல செய்தனர்.

