Theme Check

மக்களை காப்பாற்றுக.. முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நடிகர் சிவகுமார் அன்புடன் கோரிக்கை !!

மக்களை காப்பாற்றுக.. முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நடிகர் சிவகுமார் அன்புடன் கோரிக்கை !!

மக்களை காப்பாற்றுக.. முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நடிகர் சிவகுமார் அன்புடன் கோரிக்கை !!
X

தமிழக முதலமைச்சராக பதவியேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் சிவகுமார் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் இன்று பவியேற்றுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்களும் பதவியேற்றனர். இந்த நிலையில் மு.க. ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகூறி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சிவக்குமாரும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நடிகர் சிவக்குமார் வெளியிட்ட வீடியோவில், தமிழ் வழியில் படித்தால்தான் நிச்சயம் வேலை உண்டு என்ற முறையை உண்டாக்கினால் தமிழ் நிச்சயமாக வாழும். ஏரி, குளங்களைப் பராமரித்து விவசாயம் செழிக்க உதவி செய்யுங்கள். கலைஞர் அவர்கள் அறிமுகப்படுத்திய உழவர் சந்தைக்கு உயிர் கொடுங்கள்.

அரசியல் சாணக்கியர் கலைஞர் அவர்களின் மடியில் வளர்ந்த நீங்கள், தமிழகத்தில் ஸ்டாலின் ஆட்சியிதான் பொற்காலம் என்று சொல்வதுபோல் ஒரு நல்லாட்சியை வழங்குங்கள். உங்களுக்கு என் வாழ்த்துக்கள், என்று வீடியோ பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it