Theme Check

உணவகத்தில் போதையில் தகராறு செய்த காவலர்கள்.. எஸ்.பி எடுத்த அதிரடி நடவடிக்கை..!

உணவகத்தில் போதையில் தகராறு செய்த காவலர்கள்.. எஸ்.பி எடுத்த அதிரடி நடவடிக்கை..!

உணவகத்தில் போதையில் தகராறு செய்த காவலர்கள்.. எஸ்.பி எடுத்த அதிரடி நடவடிக்கை..!
X

உணவகத்தில் குடிபோதையில் ரகளை செய்த மூன்று காவலர்களை ஆயுதப்படைக்கு மாற்றி கோவை மாவட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். பொள்ளாச்சி அடுத்த புளியம்பட்டியில் இரவு நேர உணவு விடுதிக்கு பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் விக்னேஷ், திவாகரன், சிபிச்சக்கரவர்த்தி ஆகியோர் உணவருந்த சென்றனர். இவர்கள் மூன்று பேரும் அமர்தீன்(27) என்பவருடன் காரில் சென்றுள்ளனர். அப்போது மூன்று காவலர்கள் மற்றும் அமர்தீன் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் உணவு வகைகளை ஆர்டர் செய்து சாப்பிட்டு கொண்டிருந்தனர்.

உணவகத்தில் போதையில் தகராறு செய்த காவலர்கள்.. எஸ்.பி எடுத்த அதிரடி நடவடிக்கை..!

அப்போது அமர்தீன் மற்றும் மூன்று காவலர்களுக்கும் உணவகத்தில் இருந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியுள்ளது. திடீரென இருதரப்பினரும் கம்பு, தென்னை மட்டையால் ஒருவருக்கொருவர் தாக்கிகொண்டுள்ளனர். இதில் கார் கண்ணாடியும் உடைக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்த மகாலிங்கபுரம் காவல்துறையினர், சம்பவ இடத்திற்குச் சென்று மூன்று காவலர்கள் உட்பட, தகராறில் ஈடுபட்டவர்களை மகாலிங்கபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே, கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித் குமார், ரகளையில் ஈடுபட்ட 3 காவலர்களையும் ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.

newstm.in

Tags:
Next Story
Share it