Theme Check

6 டன் பாறையில் எஸ்.பி.பியின் முகம் வடிவமைப்பு.. நினைவு இல்லத்தின் சிறப்பு !!

6 டன் பாறையில் எஸ்.பி.பியின் முகம் வடிவமைப்பு.. நினைவு இல்லத்தின் சிறப்பு !!

6 டன் பாறையில் எஸ்.பி.பியின் முகம் வடிவமைப்பு.. நினைவு இல்லத்தின் சிறப்பு !!
X

தனது வசீகரக் குரலால் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். எஸ்.பி. பாலசுப்ரமணியம் கடந்த 2020ஆம் காலமானார். இதனால், உலகெங்கும் வாழும் இசை ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து காஞ்சிபுரம் அருகில் தாமரைப்பாக்கம் சர்வேஸ்வரா நகரில் உள்ள அவரது பண்ணை வீட்டில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அங்கு எஸ்.பி.பிக்கு நினைவு இல்லத்தை அவரது குடும்பத்தினர் உருவாக்கி வருகின்றனர். இதற்கான பணிகள் ஓராண்டாக நடைபெற்று வரும் நிலையில், இப்பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது.

spb

இங்கு அமைக்கப்படும் சிலைகள், புதுச்சேரி அடுத்துள்ள ஆரோவில் உள்ள சிற்பக்கூடத்தில் உருவாகியுள்ளன. இதுபற்றி சிற்பக்கூடத்தினர் கூறுகையில், தாமரைப்பாக்கத்தில் எஸ்.பி.பி நினைவு இல்லத்தில் ஓராண்டாக பணி நடந்து வருகிறது. அழகிய வடிவமைப்பின் ஒரு பகுதியாக, ஒரு பாறையை குடைந்து எஸ்.பி.பி முகத்தை வடிவமைக்க திட்டமிட்டோம்.

இதற்காக 6 டன் எடைக் கொண்ட பாறை திருவக்கரையில் இருந்து பெறப்பட்டது. 6 மாதங்களாக இதற்கான பணி நடந்து, அழகிய உருவம் வரப்பெற்றுள்ளது. அவரது உருவத்தின் அருகில் அவரது கையெழுத்து, அவர் அடிக்கடி உச்சரிக்கும், ‘சர்வே ஜனாஸ்ஸு; ஜனா பவந்து; ஸர்வேசு ஜனா சுகினோ பவன்’ என்ற சமஸ்கிருத மந்திரத்தையும் செதுக்கியிருக்கிறோம், என்றார்.

spb

இதன் அர்த்தம், அனைவரும் மகிழ்ச்சியாக நோயின்றி ஆரோக்கியமாக இருக்க வேண்டும்; அனைவருக்கும் சுபம் விளைய வேண்டும்; ஒருவர் கூட துயரம் அடையக்கூடாது, என்பதே குறிப்பிடத்தக்கது.

சிற்பி கருணாகரன் குமார் தலைமையில் 6 சிற்பிகள் இதை வடிவமைத்துள்ளனர். இப்பணிகள் ஆரோவில் முடிவடைந்து நேற்று மாலையில் அழகிய கலை வடிவத்தை, கிரேன் மூலம் வாகனத்தில் ஏற்றி தாமரைப்பாக்கத்தில் உள்ள எஸ்.பி.பி நினைவு இல்லத்துக்கு அனுப்பியுள்ளனர்.


newstm.in


Next Story
Share it